“இந்திய அணி அசால்ட்டா இறுதிப் போட்டிக்கு செல்லும்…” இந்திய முன்னாள் வீரர் நம்பிக்கை!

Photo of author

By Vinoth

“இந்திய அணி அசால்ட்டா இறுதிப் போட்டிக்கு செல்லும்…” இந்திய முன்னாள் வீரர் நம்பிக்கை!

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் எந்த லெவலுக்கு முன்னேறும் என்பது குறித்து பல்வேறு வீரர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த முறை இந்த தொடரில் 16 அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடைசியாக 2007 ஆம் அண்டு கோப்பையை வென்றது. அதன் பிறகு 15 ஆண்டுகளாக இன்னும் அந்த வாய்ப்பு அமையவில்லை. அதனால் இந்த முறைய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்திய அணி பந்துவீச்சில் பலவீனமாக உள்ளது. குறிப்பாக பூம்ரா இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டுள்ள ஷமி சிறந்த பந்துவீச்சாளர் என்றாலும், அவர் கடந்த ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் அவரின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு 30 சதவீதம் மட்டுமே உள்ளது என முன்னாள் உலககக்கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். மேலும் ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட வர்ணனையாளர்களூம் இதுபற்றி நம்பிக்கையான கருத்துகளை சொல்லவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஜாகீர் கான் “இந்திய அணி நிச்சயமாக இறுதிப்போட்டிக்கு செல்லும். தொடர்ந்து சிறப்பான் ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தி வருகிறது. அதைவைத்துதான் நாம் அணியை மதிப்பிடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.