இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை! இதை மீறினால் ரு 10000 அபராதம்!!

0
114

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை! இதை மீறினால் ரு 10000 அபராதம்!!

போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கான அபராத தொகை குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவாறு:

இருசக்கர வாகனத்தை அதி வேகமாக ஓட்டினால் ரூ.1000 அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும்.

போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டினால் 1000 அபராதமும் அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.10000 அபராதம் வசூலிக்கப்படும்.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ அல்லது அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் நபர் ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

அதிகாரிகள் கேட்கப்படும் ஆவணங்களை கொடுக்க மறுத்தால் ரூ 500 அபராதமும் இதே தவறை மீண்டும் செய்தால் 1500 அபராதமும் வசூலிக்கப்படும்.

தேவை இல்லாமல் ஹாரன் அடிப்பது அல்லது தடை செய்யப்பட்ட இடத்தில் ஹாரன் அடித்தால் ரூ 1000 அதே தவறை மீண்டும் செய்தால் 2000-மும் அபராதம் வசூலிக்கப்படும்.

author avatar
Pavithra