வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!!

0
87

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!!

போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் வறப்பட்டு இருப்பதவாறு:

மோட்டார் வாகன பதிவை புதுப்பிக்க தவறும் பட்சத்தில் அபராதம் ரூ.500 வசூலிக்கப்படும் என்றும் மீண்டும் இதே தவறை செய்தால் ரூ.1500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர் மாறினால் அது குறித்த பதிவை குறிப்பிட்ட காலத்துக்குள் மாற்றாவிட்டாலோ,வண்டியை தடை செய்யப்பட்ட இடத்தில் விட்டு சென்றாலோ,
காவல்துறை வாகனத்துக்கான ஆவணங்களை கேட்கும் பொழுது அதை கொடுக்க மறுத்தாலோ முதலில் ரூ 500 அபராதமும் மீண்டும் இதே தவறு செய்தால் ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும்.

வேறு மாநிலத்தில் இருந்து கொண்டு வந்த மோட்டார் வாகனத்தை மறுப்பதிவுக்கு 12 மாதத்திற்குள் விண்ணப்பிக்காவிட்டால் ரூ 500 அபராதமும் மறுபடியும் அதே தவறு செய்தால் 1500 அபராதமும் விதிக்கப்படும்.

பேருந்துகளில் டிக்கெட் அல்லது பாஸ் இல்லாமல் பயணித்தாலோ அல்லது அவற்றை சோதனையின் போது கொடுக்காவிட்டாலோ 500 அபராதமும் மீண்டும் அதே தவறை செய்தால் 1500 அபராதமும் விதிக்கப்படும்.

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிகாரிகளிடம் தவறான தகவல்களை கொடுத்தாலும் அல்லது தகவல்களை கொடுக்க மறுத்தாலோ 2000 அபராதம் வசூலிக்கப்படும்.

அங்கீகரிக்கப்படாத நபரை பேருந்துகளை இயக்க செய்தாலோ அல்லது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினாலோ 5000 அபராதம் வசூலிக்கப்படும்.

சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவீடுக்கும் மீறி வாகனத்தை தயாரித்து அதனை விற்பனை செய்தால் 5000 அபராதம் விதிக்கப்படும்.

வண்டியில் முக்கியமான பாகங்கள் என அரசால் நிர்ணயிக்கப்பட்ட பாகங்கள் இல்லாமல் வண்டி ஓட்டினாலோ அல்லது அதனை விற்றாலோ 2000 அபராதம் விதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி வண்டியை ஓட்டினாலோ அல்லது தொலைபேசியை பேசிக்கொண்டு வண்டியை ஓட்டினாலோ ரூ.10,000 அபராதம்.

கனரக வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி அதிக எடைகளை ஏற்றி சென்றான் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்படும்.

author avatar
Pavithra