இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் மொத்த எலி கூட்டமும் வீட்டை விட்டு ஓடிவிடும்!!

Photo of author

By Divya

இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் மொத்த எலி கூட்டமும் வீட்டை விட்டு ஓடிவிடும்!!

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த எலி அளவில் சிறியவை என்றாலும்மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் ஏதும் கிடைத்தபாடில்லை என்பது தான் நிதர்சனம்.

*வீட்டிற்கு அருகில் சாக்கடை, டிச்சி உள்ளிட்டவைகள் இருந்தால் எலி பெருக்கம் அதிகம் இருக்கும். இதனால் எலிகள் வீட்டிற்குள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

*வீட்டிற்குள் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தால் அதை மோப்பம் பிடித்துக் கொண்டு எலிகள் வீட்டிற்குள் வந்து விடும்.

*மண் தரை உள்ள வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு ஆகியவற்றில் எலிகள் எளிதில் நுழைந்து உற்பத்தியாகி விடும்.

எலியால் பரவும் உயிருக்கு ஆபத்து நிறைந்த நோய்கள்:-

*லெப்டோஸ்பிரோசிஸ் எனும் மரணத்தை ஏற்படுத்தும் நோய் எலியின் சிறுநீர் மூலம் பரவுகிறது.

*ஹெப்படைடிஸ் ஈ என்ற கிருமிகள் எலியின் மூலம் பரவுகிறது.

*கொடிய நோயான பிளேக் நோய் எலியின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

1)பேபி பவுடர் வாடை எலிகளுக்கு அறவே பிடிக்காது. இந்த பேபி பவுடரை எலிகள் நடமாட்டம் காணப்படும் இடங்களில் தூவி விட்டால் எலிகள் அங்கே வராது.

2)கட்ட புகையிலையை தூள் எலி வரும் இடத்தில் வைத்தாலே போதும் அந்த புகையிலை வாடைக்கு எலி வரவே வராது.

3)பிரியாணி இலை(பிரிஞ்சி) வாசனை என்றால் எலிகளுக்கு அறவே பிடிக்காது. எனவே சிறிதளவு பிரியாணி இலைகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விடலாம். இவ்வாறு செய்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மொத்த எலி கூட்டமும் வீட்டை விட்டு ஓடி விடும்.

3)முதலில் 2 அல்லது 3 பாரசிட்டமால் மாத்திரையை பொடி செய்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளவும். பின்னர் 2 தேக்கரண்டி கோதுமை மாவு, 2 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். இந்த உருண்டைகளை எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்தால் எலிகள் அதை உண்டு இறந்து விடும்.

4)ஒரு’பவுலில் 2 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்க்கவும். பின்னர் 1 1/2 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். அடுத்து 10 முதல் 15 தீக்குச்சியில் இருக்கும் மருந்தை எடுத்து அதில் சேர்த்து கொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் வைக்கவும். இதை எலி உண்ட அடுத்த 1 மணி நேரத்தில் வயிறு வீங்கி இறந்து விடும்.