சர்க்கரை நோயை அடியோடு நீக்க இந்த ஏழு பொருள் போதும்!!

Photo of author

By Sakthi

சர்க்கரை நோயை அடியோடு நீக்க இந்த ஏழு பொருள் போதும்!!

நமக்கு இருக்கும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 பொருட்களை பயன்படுத்தி மருந்து தயாரித்து எவ்வாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு எடுக்கும் மருந்து மாத்திரைகளுடன் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கையான மருத்துவத்தை பார்க்கலாம்.

 

இதை செய்ய தேவையான பொருள்கள்…

 

* நாவல் கொட்டை பொடி

* சீம்பில் தண்டு பொடி

* கீழாநெல்லி பொடி

* கோரைக் கிழங்கு பொடி

* நெல்லி வற்றல் பொடி

* கருவேப்பிலை பொடி

* கடுக்காய் பொடி

 

தயார் செய்யும் முறை…

 

கோரை கிழங்கு பொடி 10 கிராம், கீழாநெல்லி பொடி 10 கிராம், நாவல் கொட்டை பொடி 10 கிராம், சீம்பில் தண்டு பொடி 10 கிராம் எடுத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

 

பிறகு கடுக்காய் பொடி, கருவேப்பிலை பொடி, நெல்லி வற்றல் பொடி மூன்றிலும் தலா 20 கிராம் எடுத்துக் கொள்ளவும். இந்த அனைத்து பொடிகளையும் சேர்த்து எடுத்தால் 100 கிராம் அளவு வரும். இந்த 100 கிராம் அளவு பொடியை நன்கு கலக்கி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு தேவைப்படும் பொழுது பயன்படுத்தலாம்.

 

இந்த பொடியை கால் டீஸ்பூன் அளவு பொடியை எடுத்து வெந்நீர் அல்லது சாதாரணமான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

 

இந்த பொடியை காலை மதியம் இரவு என்று மூன்று வேலையும் குடிக்க வேண்டும். மூன்று வேலையும் உணவு சாப்பிட 10 நிமிடம் முன்பு இந்த பொடியை கலந்து குடிக்க வேண்டும்.

 

இவ்வாறு தொடர்ந்து குடித்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.