வீட்டில் இருக்கும் இந்த நான்கு பொருட்களை பயன்படுத்துங்கள்!! சொரி சிரங்கு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

0
135
#image_title

வீட்டில் இருக்கும் இந்த நான்கு பொருட்களை பயன்படுத்துங்கள்!! சொரி சிரங்கு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

 

நம்மில் சிலருக்கு சொறி சிரங்கு பிரச்சனை இருக்கும். அதை குணப்படுத்த பலவிதமான சிகிச்சைகளையும் மருந்து மாத்திரைகளையும் எடுத்திருப்பீர்கள். ஆனால் அது எதுவும் பயன் தந்திருக்காது. அந்த சொறி சிரங்கை குணப்படுத்த சில எளிமையான வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் கணலாம்.

 

சொறி சிரங்கை குணப்படுத்த சில எளிமையான வைத்திய முறைகள்…

 

* சொறி சிரங்கு இருக்கும் பகுதியில் சீயக்காய் மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்து அதை சொறி சிரங்கு இருக்கும் பகுதியில் தேய்த்து கழுவ வேண்டும். பிறகு பூவரச மரத்தின் பழுத்து விழுந்த இலைகளை தீயில் சுட்டு கருக்கி பொடியாக்கி அதை சொறி சிரங்கு இருக்கும் பகுதியில் தேய்த்து வந்தால் குணமாகும்.

 

* தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சேர்த்து எள் எண்ணெய் சேர்த்து இந்த கலவையை அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

 

* வேப்ப மரத்தின் இலைகளை அரைத்து பேஸ்டாக்கி அரிப்பு உள்ள இடங்களில் இந்த பேஸ்டை தடவ வேண்டும். அவ்வாறு தடவி வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

 

* ஒரு துண்டு மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்டாக தயார் செய்து சொறி சிரங்கு இருக்கும் பகுதியில் தேய்த்து வந்தால் இந்த பிரச்சனை குணமாகும்.

 

* நிலவாரை செடியை அரைத்து தைலம் தயாரித்து சொறி சிரங்கு இருக்கும் பகுதியில் தேய்த்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.