பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு!

0
260
#image_title

பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு!

கோவையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துக்கொள்ளும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக சார்பில் மனு.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார், அந்த வகையில் வருகின்ற 18 தேதி பாஜக சார்பில் கோவையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி நடத்த அனுமதி கேட்டு நான்கு தினங்களுக்கு முன்பு கோவை காவல்துறையிடம் அனுமதி கடிதம் வழங்கினர்.

ஆனால் கோவை காவல்துறை மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் மேலும் போக்குவரத்து பாதிக்கப்படும் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்தது.

இந்தியா முழுவதும் இது போன்ற பேரணி தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு மட்டுமே உள் நோக்கத்தோடு இந்த பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது.

எனவே பேரணிக்கு அனுமதி கோரி பாஜக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரித்து தீர்ப்பு வழங்க இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

Previous article‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் – காமெடி கலந்த கதைக்களம்!
Next articleசென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!