வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் லீலைகள் – தப்பிவந்த பெண்ணின் அதிரவைக்கும் பேட்டி!

0
242
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் லீலைகள் - தப்பிவந்த பெண்ணின் அதிரவைக்கும் பேட்டி!
#image_title

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் விவரங்களை, அங்கிருந்து தப்பி வந்த பெண் அளித்துள்ள பேட்டி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

வடகொரிய நாடு இந்த உலகத்தில் இருந்து தனித்து செயல்படும் ஒரு நாடாக கருதப்படுகிறது. அந்நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அந்நாட்டின் சட்ட விதிமுறைகளும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், அந்நாட்டின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பற்றி வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் உலக மக்களை அதிர்ச்சில் தான் ஆழ்த்தியுள்ளன.

அப்படியாக கிம் ஜாங் உன்னின் ‘களிப் படை’ (பிளஷர் ஸ்குவாட்) என்று சொல்லப்படும் அந்தரங்க மாளிகையிலிருந்து தப்பி வந்த பெண் யோன்மி பார்க், மிர்ரர் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரின் அந்த பேட்டியில், அதிபருக்கு நெருக்கமான அதிகாரிகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளி வகுப்பாறைகளையும் பார்வையிடுவார்கள். அப்படி அவர்கள் கண்ணில் படும் அழகான பெண்களின் குடும்பப் பின்னணியையும், அரசியல் நிலைப்பாட்டையும் தெரிந்து கொண்டு தேர்வு செய்வார்கள்.

yoning parag
yoning parag

குறிப்பாக வடகொரியா நாட்டிலிருந்து தப்பிப்போடிய குடும்பத்தின் உறுப்பினர்களாகவோ, தென்கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உறவினர்கள் உள்ள குடும்பங்களின் பெண்களை அவர்கள் தேர்வு செய்வதில்லை.

இப்படியாக அந்த அதிகாரிகளால் தேர்வு செய்யப்படும் பெண்களின் பணி என்பது, வட கொரிய அதிபரை அனைத்து வகை அனைத்து வகையிலும் மகிழ்விப்பது தான் என்ற அதிர்ச்சி செய்தியை யோன்மி பார்க் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆண்டுதோறும் சுமார் 25 அழகான பெண்களை இதற்காகவே தேர்வு செய்கிறார்கள். பல கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அவர்களை மசாஜ் அளிப்பதற்கு, ஆடிப்பாடி மகிழ்விப்பதற்கு, பாலியல் செயல்களுக்கு என்று தனியாக குழுவாக பிரிக்கின்றனர்.

மேலும் அதிபருக்கு மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கும் இந்த பெண்கள் மகிழ்விக்க வேண்டும் என்று யோன்மி பார்க் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.