நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

0
225
#image_title

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

1)கடுக்காயை கஷாயம் செய்து தினசரி வாய் கொப்பளித்து வந்தால் பல் ஆட்டம் நிற்கும்.

2)வேப்ப இலையை அரைத்து உட்கொண்டு வந்தால் இரத்த சோகை மற்றும் அரிப்பு நீங்கும்.

3)ஓமத்தை வறுத்து ஒரு துணியில் மூட்டை கட்டி குழந்தைகளின் மூக்கின் அருகில் கொண்டு சென்று சுவாசிக்க வைத்தால் சளி கரைந்து வெளியேறும்.

4)தினமும் காலையில் 1 துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் குடலில் அடைபட்டு கிடக்கும் கழிவுகள் முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.

5)செம்பருத்தி இலையை உலர்த்தி பொடி செய்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

6)துளசி இலை, சுக்கு, இலவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

7)நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொடர் விக்கல் பிரச்சனை சரியாகும்.

8)கரும்பு சக்கையை எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணை கலந்து உதட்டில் பூசி வந்தால் உதடு வெடிப்பு குணமாகும்.

9)கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் 1 கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் செரிமானக் கோளாறு நீங்கும்.

10)வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.