நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!
1)தலைவலி நீங்க:- வேப்பங்கொட்டையை அரைத்து விழுதாக்கி தலையில் பத்து போட்டுக் கொண்டால் எப்பேர்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமாகி விடும்.
2)ஆஸ்துமா குணமாக:- வெற்றலை மற்றும் இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா விரைவில் குணமாகும்.
3)நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க:- முருங்கை, புதினா, கறிவேப்பிலை ஆகிய மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
4)உடல் எடை குறைய:- காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் அருகம்புல் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
5)மூட்டு வலி குணமாக:- குப்பைமேனி இலையை ய=தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வலி குணமாகும்.
6)இரத்த கட்டு குணமாக:- தழதாழை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி வலி ஏற்படும் இடங்களில் பற்றுப்போட்டு வந்தால் வீக்கம் மற்றும் இரத்தக் கட்டு குணமாகும்.
7)சுகபிரசவம் ஆக:- குங்குமப் பூவை வெற்றிலை பாக்குடன் சேர்த்து சாப்பிடலாம்.
8)பல் வலி தீர:- மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்து பற்களை துலக்கினால் பல் வலி தீரும்.
9)காயங்கள் ஆற:- வேப்பங் கொழுந்து மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்து காயங்கள், புண்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
10)நரம்பு பிடிப்பு குணமாக:- சீரகம், சோம்பு, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து 1 கிளாஸ் நீரில் கொதிக்க விட்டு 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்.