கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!

0
394
#image_title

கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!

ருசியான உணவிற்கு நாம் தரும் முக்கியத்துவம்.. ஆரோக்கியமான உணவிற்கு தருவதில்லை. இதனாலேயே பல நோய் பாதிப்புகளை உடல் சந்திக்கும் மோசமான நிலை ஏற்படுகிறது. இதில் முக்கிய உள் நோய் கிட்னி ஸ்டோன். உடல் பருமன், உடல் உஷ்ணம், சிறுநீரக தொற்று இருப்பவர்களுக்கு இந்த கிட்னி ஸ்டோன் எளிதில் ஏற்படும்.

கிட்னி ஸ்டோன்: மூலிகை மருத்துவம்…

தேவையான பொருட்கள்…

*கல்லுருக்கி பச்சை
*இளநீர்

ஒரு கைப்படி அளவு கல்லுருக்கி பச்சை மூலிகை செடி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும். அடுத்து ஒரு முழு இளநீர் தண்ணீரை அதில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்தால் கிட்னியில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்…

*பீன்ஸ்
*தண்ணீர்

ஒரு கப் அளவு விதை நீக்கப்பட்ட பீன்ஸ் தோல் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்தால் சிறுநீரக கல் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்…

*தாமரை பொடி
*சிறுபீளை

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் தாமரை பொடி மற்றும் 1/4 கப் சிறுபீளை சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்தால் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.