15 நோய்களுக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க மக்களே!!

0
142
#image_title

15 நோய்களுக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க மக்களே!!

நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.அதற்கு இயற்கை முறையில் பல்வேறு வழிகள் இருக்கிறது.அந்த வகையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பானம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1.வெந்தயம் – 1 தேக்கரண்டி

2.கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு

3.பட்டை – 1 துண்டு

4.இஞ்சி – 1 துண்டு

5.தண்ணீர் – 250 மில்லி

செய்முறை:-

1)ஒரு பாத்திரத்தில் உடம்புக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம் 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.

2)அடுத்து மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த கருவேப்பிலை இலை 1 கைப்பிடி அளவு எடுத்து அதில் சேர்க்கவும்.

3)வாசனை நிறைந்த பட்டை ஒரு துண்டு அதில் போடவும்.

4)அதேபோல் இஞ்சி ஒரு தூண்டு சேர்த்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
இவை கொதித்து 100 மில்லியாக வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

5)பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.

*வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து,இரும்புச்சத்து,பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை நீரிழிவு நோய்,நெஞ்சு எரிச்சல்,வயிற்று வலி,வயிற்று கடுப்பு உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

*கறிவேப்பிலையில் அதிகளவு கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி,ஏ,பி, இ நிறைந்து உள்ளது.இவை ரத்தசோகை,சர்க்கரை வியாதி,செரிமான பிரச்சனை,உடல் எடை உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.

*பட்டை மாங்கனீஸ்,இரும்பு,கால்சியம் உள்ளிட்ட ஏரளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இவை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி,அஜீரணம்,நெஞ்செரிச்சல்,
கீல்வாதம், மூட்டுவலி,தசைவலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.

*இஞ்சியில் அதிகளவு கால்சியம்,பொட்டாசியம்,சோடியம்,இரும்புச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இது சுவாசப் பிரச்சனை,வயிற்றுப்போக்கு,காலரா,பல் வலி, ரத்தக்கசிவு,நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.

Previous articleஅடிபட்டு ஏற்படும் இரத்தக்கட்டு!!! இதை சரி செய்ய உதவும் 5 டிப்ஸ்!!! 
Next article“பேங்க் ஆப் பரோடா” வங்கியில் பணி புரிய விருப்பமா? இன்றே விண்ணப்பம் செய்ய தொடங்குங்கள்!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!!