வாயுத் தொல்லையை 2 நிமிடத்தில் சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி?

0
102
#image_title

வாயுத் தொல்லையை 2 நிமிடத்தில் சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி?

இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உணவு செரிக்காமை, உரிய நேரத்தில் மலத்தை கழிக்காமை, எண்ணெயில் பொரித்த உணவு அதிகளவு உண்ணுதல் உள்ளிட்ட காரணங்களால்ஏற்படும் வாயுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம்.

வாயுத் தொல்லைக்கான அறிகுறிகள்:-

*சாப்பிட்ட உடன் வயிறு வீக்கம்

*வயிறு உப்பசம்

*தொடர் ஏப்பம்

*ஆசன வாய் வழியாக தொடர்ந்து கெட்ட வாயு வெளியேறுதல்

வாயுத் தொல்லை ஏற்படக் காரணங்கள்:-

*எளிதில் செரிக்காத உணவு

*மலத்தை அடக்கி வைப்பது

*அதிக காரம் நிறைந்த உணவை உண்ணுதல்

*துரித உணவை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்

*மன அழுத்தம்

வாயுத் தொல்லையை சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவல்லி – 3

*மிளகு – 5

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*பூண்டு – 2

*மஞ்சள் – சிட்டிகை அளவு

*உப்பு – சிறிதளவு

*ஓமம் – சிறிதளவு

செய்முறை…

முதலில் 3 கற்பூரவல்லி இலையை எடுத்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு உரலில் 5 மிளகு, 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து இடித்தெடுத்துக் கொள்ளவும்.

பின்னர் 2 பூண்டு பற்களை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலை, இடித்த மிளகு, சீரகம் சேர்த்து கொள்ளவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள், ஓமம் சிறிதளவு, மஞ்சள் தூள் சிட்டிகை அளவு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 1 14 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை 1 டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து பருகவும். இவ்வாறு செய்தால் நாள்பட்ட வாயுத் தொல்லை பிரச்சனை சில நிமிடத்தில் சரியாகும்.

Previous articleஉலர் அத்திப் பழத்தின் மகிமை தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிட ஆரமித்து விடுவீர்கள்!!
Next articleபாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா?