அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

Photo of author

By Divya

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

1)மூட்டு வலி குணமாக:- சூடான நல்லெண்ணெயில் மஞ்சள் தூள் சேர்த்து மூட்டுகளின் மேல் தடவலாம்.

2)வாயுத் தொல்லை:- சூடு நீரில் பெருங்காயத் தூள் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தலாம்.

3)சளித் தொல்லை நீங்க:- சூடான பாலில் மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.

4)பல் மஞ்சள் கறை நீங்க:- சோடா உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து பற்களை தேய்த்து துலக்கலாம்.

5)சொத்தைப் பல் வலி குணமாக:- 1 துண்டு புளியை பல் வலி இருக்கும் இடத்தில் வைக்கலாம்.

6)சிறுநீரக கற்கள் வெளியேற:- சிறுகண் பீளை பூவை அரைத்து பாலில் கலந்து பருகலாம்.

7)இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்க:- சூடு நீரில் இஞ்சி சேர்த்து அருந்தலாம்.

8)வாய் துர்நாற்றம் நீங்க:- 4 இலவங்கத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். 1 ஏலக்காயை மென்று சாப்பிடலாம்.

9)நிம்மதியான தூக்கத்திற்கு:- தினமும் இரவு மஞ்சள் கலந்த பால் அருந்தலாம்.

10)கொழுப்பு கட்டி கரைய:- சுடுநீரில் உப்பு சேர்த்து கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

11)தைராய்டு பாதிப்பு சரியாக:- சுக்கு, எள்ளை நீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி தேன் சேர்த்து அருந்தலாம்.

12)மூல நோய் குணமாக:- துத்தி கீரையை பாலில் கலந்து அருந்தலாம்.

13)சர்க்கரை நோய் குணமாக:- எருக்க இலை டீ அருந்தலாம்.

14)மாரடைப்பு வராமல் இருக்க:- சின்ன வெங்காயம், இலவங்கம், இடித்த மிளகை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து அருந்தலாம்.

15)வயிற்றுப் புண் குணமாக:- மணத்தக்காளி காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

16)உடல் எடை அதிகரிக்க:- பாலில் தேன் சேர்த்து அருந்தலாம்.

17)கல்லீரல் ஆரோக்கியம் [மேம்பட:- கறிவேப்பிலை ஜூஸ் செய்து அருந்தலாம்.

18)கழுத்து வலி குணமாக:- பசும்பாலில் தேன் மற்றும் மஞ்சள் சேர்த்து அருந்தலாம்.

19)ஆஸ்துமா குணமாக:- ஏலக்காய் நீர் அருந்தலாம்.

20)உடல் எடை குறைய:- இஞ்சி தேநீர் பருகலாம். க்ரீன் டீ பருகலாம்.

21)நெஞ்சு குத்தல் குணமாக:- தேங்காய் பாலில் முந்திரி, பூண்டு, இஞ்சி சேர்த்து அருந்தலாம்.

22)தேள் கடி விஷம் முறிய:- எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து தேள் கடித்த இடத்தில் தடவில் விஷம் முறியும்.

23)நெஞ்சு எரிச்சல் குணமாக:- சுடுநீரில் பெருஞ்சீரகத்தை சேர்த்து பருகலாம்.

24)பாம்பு விஷம் முறிய:- அவுரி இலையை அரைத்து பாம்பு கடித்த இடத்தில் தடவினால் பாம்பு விஷம் முறியும்.

25)அல்சர் குணமாக:- மோரில் வெந்தயப் பொடி சேர்த்து அருந்தலாம்.

26)மஞ்சள் காமாலை குணமாக:- கீழாநெல்லி வேர் மற்றும் நெருஞ்சி வேரை அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.

27)செரிமானக் கோளாறு நீங்க:- மிளகு ரசம் வைத்து சாப்பிடலாம்.

28)பூரான் கடி குணமாக:- குப்பைமேனி இலை மற்றும் உப்பு சேர்த்து அரைத்து அதில் மஞ்சள் கலந்து பூரான் கடித்த இடத்தில் தடவலாம்.

29)பாத வெடிப்பு குணமாக:- மருதாணி மற்றும் மஞ்சள் கிழங்கை அரைத்து வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவலாம்.

30)உடல் சூடு குறைய:- நீரில் கொத்தமல்லி, சீரகம், கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தலாம்.