அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!!

0
88
#image_title

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!!

1)காய்ச்சல் குணமாக: சிறுகுறிஞ்சா வேர் பொடி கஷாயம் செய்து சாப்பிடலாம்.

2)குடல் புண் குணமாக:- மணத்தக்காளி காய் மற்றும் கீரையை சமைத்து சாப்பிடலாம்.

3)குடல் புழுக்கள் வெளியேற:- மாதுளம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடலாம். வேப்ப இலையை மென்று சாப்பிடலாம்.

4)வாயுத் தொல்லை நீங்க:- ஓமத்தை நீரில் கொதிக்கவிட்டு பருகலாம்.

5)உடல் வலுப்பெற:- தினமும் பப்பாளி பழம் சாப்பிடலாம்.

6)மார்பு சளி குணமாக:- பாலில் மஞ்சள் கலந்து பருகலாம்.

7)சளித் தொல்லை நீங்க:- பூண்டு, மிளகை வைத்து ரசம் செய்து சாப்பிடலாம். அதேபோல் அருகம் புல் சாறு பருகி வரலாம்.

8)ஜலதோஷம் நீங்க:- துளசி, இஞ்சி சாற்றில் தேன் கலந்து பருகலாம்.

9)மலச்சிக்கல் குணமாக:- வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு விளக்கெண்ணெய் ஊற்றி குடிக்கலாம்.

10)காதுவலி குணமாக:- மணத்தக்காளி கீரை, துளசி இலையையும் சம அளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.

11)காதில் பூச்சி புகுந்தால்:- குப்பைமேனி சாறுடன் குழந்தையின் சிறுநீரை கலந்து சில சொட்டுக்கள் விட்டால் பூச்சி வெளியேறி விடும்.

12)தும்மல் நிற்க:- தூதுவளை இலை மற்றும் மிளகு பொடி சம அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.

13)மூட்டு வலி குணமாக:- விளக்கெண்ணெயில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து மூட்டுகளின் மேல் தடவவும்.

14)நீர் கோர்வை குணமாக:- சிறுகீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வரலாம்.

15)அலர்ஜி குணமாக:- குங்குமப் பூவுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிடலாம்.

16)பேன் தொல்லை நீங்க:- தயிருடன் வேப்ப இலை விழுதை கலந்து தலைக்கு பயன்படுத்தலாம்.

17பொடுகு தொல்லை நீங்க:- எலுமிச்ச சாற்றை தலையில் தேய்த்து குளிக்கலாம்.

18)பல் மஞ்சள் கறை நீங்க:- உப்பு மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பற்களில் தேய்த்து துலக்கலாம்.

19)சொத்தைப் பல் வலி குணமாக:- 1 பல் பூண்டை இடித்து சொத்தைப் பல் வலி இருக்கும் இடத்தில் வைக்கலாம்.

20)சிறுநீரக கற்கள் வெளியேற:- வாழைத்தண்டு சூப் சாப்பிடலாம்.

21)உடல் சூடு குறைய:- தலை மற்றும் தொப்புளில் நல்லெண்ணெய் வைத்து வரலாம்.

22)மலேரியா காய்ச்சல் குணமாக:- நிலவேம்பு கஷாயம் செய்து பருகலாம்.

23)கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட:- வேப்பிலை ஜூஸ் அருந்தலாம்.

24)உடல் பிட்டாக இருக்க:- பீட்ரூட் ஜூஸ் அருந்தலாம்.

25)இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க:- நாவல் ஜூஸ் அருந்தலாம்.

26)உடல் எடையை குறைக்க:- சூடு நீரில் தேன் கலந்து அருந்தலாம்.

27)இரத்தத்தை சுத்தப்படுத்த:- தினமும் 1 பல் பூண்டு சாப்பிடலாம்.

28)மூல நோய் குணமாக:- துத்தி கீரையை சமைத்து சாப்பிடலாம்.

29)இரத்த சோகை நீங்க:- உலர் அத்திப்பழம் சாப்பிடலாம்.

30)மாலைக்கண் நோய் குணமாக:- மூக்கிரட்டை இலை சாற்றை பாலில் கலந்து அருந்தலாம்.