தினமும் ஒரு கிளாஸ் “சீரக டீ” பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!!

0
64
#image_title

தினமும் ஒரு கிளாஸ் “சீரக டீ” பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!!

நம் தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான சீரகம் அதிக வாசனையோடு இருப்பதோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சீரகத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:-

இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம்.

தினமும் சீராக டீ பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்:-

**வாயுத் தொல்லையை சரி செய்ய இந்த சீரகத் தேநீர் பெரிதும் உதவுகிறது.

**உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள தினமும் சீர்கத் தேநீர் அருந்துவது நல்லது.

**செரிமானக் கோளாறுக்கு சிறந்த தீர்வாக இருப்பது இந்த தேநீர் தான்.

**அடிக்கடி தலைசுற்றல் பிரச்சனை இருக்கும் நபர்கள் சீரகத்தில் டீ செய்து பருகலாம்.

**உடலில் உள்ள பித்தத்தை குறைக்க சீரக டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

**இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சீரக டீ பருகி வாருங்கள்.

சீரக டீ செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*சீரகம்

*பனங்கற்கண்டு

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து பருகவும்.