தினமும் ஏலக்காய் நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்..!!

0
67
#image_title

தினமும் ஏலக்காய் நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்..!!

நாம் உபயோகிக்கும் சமையல் பொருட்களில் அதிக வாசனை நிறைந்த ஒன்று ஏலக்காய். இவை இனிப்பு பண்டங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுநாள் வரை சமையலில் வாசனைக்கு மட்டும் பயன்படுத்தி வந்த இந்த ஏலக்காய் ஒரு மூலிகை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த ஏலக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருளாக இருக்கின்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

இந்த ஏலக்காயை காலையில் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.

**அஜீரணக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் தினமும் 1 கிளாஸ் ஏலக்காய் நீர் பருகினால் விரைவில் நல்ல பலன் உண்டாகும்.

**மலச்சிக்கல், வயிறு உப்பசம், வாயுத் தொல்லைக்கும் இந்த ஏலக்காய் நீர் சிறந்த தீர்வாக இருக்கும்.

**உடலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

**நம்மில் பெரும்பாலானோர் வாயு துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பை சரி செய்ய ஏலக்காய் நீர் பருகலாம்.

**தோல் தொடர்பான பாதிப்பு சரியாக தினமும் ஏலக்காய் நீர் பருகுவது நல்லது.

**ஏலக்காய் நீர் உடலுக்கு தேவையான மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.

**இரத்த அழுத்தம், இரத்த சோகை உள்ளிட்ட இரத்தம் தொடர்பான பாதிப்புகள் குணமாக ஏலக்காய் நீர் பருகலாம்.

**ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனையை சரி செய்ய ஏலக்காய் நீர் அருந்தி வரலாம்.