தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

0
54
#image_title

தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

பொதுவாக உலர வைத்த உண்ணும் பழங்களின் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கும்.உலர் அத்தி,
உலர் திராட்சை,உலர் கிவி உள்ளிட்டவைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.இந்த உலர் வகை பழங்களில் ஒன்றான திராட்சையில் பல்வேறு வகைகள் இருக்கிறது.இந்த உலர் திராட்சையை தினமும் ஊறவைத்து உண்டு வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.இந்த உலர் திராட்சையில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,நார்ச்சத்து இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து இருக்கிறது.

தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத பயன்கள்:-

*உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை பருகுவதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.

*உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்ற உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை பருகுவது முக்கியம்.அதுமட்டும் இன்றி உடலில் முக்கிய உறுப்பான கல்லீரலையும் பாதுகாக்க இவை பெரிதும் உதவுகிறது.

*இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் தினமும் 8 முதல் 10 உலர் திராட்சையை உண்டு வருவதன் மூலம் அந்த பாதிப்பு விரைவில் குணமாகும்.

*உலர் திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வாயில் உள்ள கேட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது.இதனால் பற்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு வாய் துர்நாற்ற பாதிப்பும் சரியாகும்.

*தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் இரத்த சோகை பாதிப்பு சரியாகும்.அது மட்டுமின்றி இரத்தில் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்கிறது.

*தினமும் உலர் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

*உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க பெரிதும் உதவுகிறது.அதுமட்டும் இன்றி கண் மற்றும் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்பை சரி செய்து ஆரோக்கியத்தை பாதுகாக்க உலர் திராட்சை பெரிதும் உதவுகிறது.