முருங்கை இலை பொடியை இப்படி பயன்படுத்தினால் உடலுக்கு 8 அற்புத நன்மைகள் கிடைக்கும்!!

Photo of author

By Divya

முருங்கை இலை பொடியை இப்படி பயன்படுத்தினால் உடலுக்கு 8 அற்புத நன்மைகள் கிடைக்கும்!!

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. முருங்கை கீரையை பொடி செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து, உடல் பருமனை குறைக்கின்றது. இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த கீரையை உணவாக எடுத்து வந்தோம் என்றால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்போம்.

முருங்கை கீரை பொடியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

1)எண்ணெயில் பொரித்த உணவு, ஜங்க் புட் உள்ளிட்டவற்றை உண்டு வருவதால் உடல் எடை விரைவில் அதிகரித்து விடுகிறது. இதனை குறைக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். இதற்கு முருங்கை கீரை பொடியை சூடு நீரில் கலந்து பருகலாம்.

2)நோய் பாதிப்புகள் நம்மை அண்டாமல் இருக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியம். நம் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் முருங்கை கீரைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. முருங்கை கீரை பொடியில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வருவது நல்லது.

3)முருங்கை கீரை பொடியில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.

4)இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முருங்கை கீரை பொடி பெரிதும் உதவுகிறது.

5)மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய சூடு நீரில் முருங்கை பொடி மற்றும் விளக்கெண்ணெய் கலந்து அருந்தலாம்.

6)உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற மூட்டுவலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகள் வரமால் இருக்க முருங்கை கீரை பொடி பயன்படுத்துவது நல்லது.

7)முடி உதிர்தல் பாதிப்பு சரியாக தினமும் முருங்கை கீரை பொடியை சாப்பிட்டு வரலாம்.