வாழைப்பூ வேக வைத்த தண்ணீரை அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்..!!
நம் உடலை ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உண்ண வேண்டும். பழ வகைகளை எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. வாழைப்பழத்தை விட அதன் பூவில் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.
வழைப்பூவில் ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன், இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, பி1 உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இந்த வாழைப்பூவை நீரில் வேக வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் உடலுக்கு எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்.
வாழைப்பூ வேக வைத்த நீரை அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-
1)உடலில் செரிமான பாதிப்பு நீங்கி ஜீரண சக்தி மேம்படும்.
2)மலசிக்கல், சீதபோதி, இரத்த மூலம் உள்ளிட்ட பாதிப்புகளுக் சிறந்த தீர்வாக இருக்கும்.
3)இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இரத்த அழுத்தத்தை சீர் செய்யும்.
4)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும்.
5)தீராத வயிற்று வலி பாதிப்பு சரியாகும்.
6)பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் வலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்கும்.
7)விந்தனு குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
8)அடிக்கடி வாழைப்பூ வேக வைத்த தண்ணீரை அருந்தி வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.