கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா?

0
256
Transgender arrested in Coimbatore murder case! Is this the reason?
Transgender arrested in Coimbatore murder case! Is this the reason?

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சில திருநங்கைகள் இருந்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் மேட்டுப்பாளையம் சாலைகளில் நின்று  அவ்வழியாக செல்பவரை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க துடியலூர் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிகழ்வு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருநங்கைகளை அழைத்து கூட்டம் நடத்தி அதில் சாலையோரங்கள் நின்று பாலியல் தொழிலுக்கு ஆண்களை அழைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனாலும் திருநங்கைகள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மாலை 6 மணியில் இருந்து இரவு 2-3 மணி வரை பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 8 ஆம்  தேதி இரவு   துடியலூரில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வர்களாக வேலை செய்து வரும் பொன்னமராவதியைச் சேர்ந்த தர்மலிங்கம் (49) மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் ரேஷ்மிக்கா என்ற திருநங்கையிடம் பாலியல் இச்சைக்காக சென்றுள்ளனர். இப்போது அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்ததாக கூறி திருநங்கை ரேஷ்மிகா கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

மேலும் அந்த சத்தத்தை கேட்ட அருகில் இருந்த அவரது நண்பர்களான திருநங்கைகள் மம்தா, கௌதமி, ரூபி ,கீர்த்தி ஆகியோர் அந்த இடத்திற்கு வந்து தர்மலிங்கம் மற்றும் பிரவீன்யை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பிரவீன் அங்கிருந்து தப்பி சென்றார். மேலும் தர்மலிங்கம் அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார். தர்மலிங்கத்திற்கு  ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து திருநங்கைகள் அனைவரும் சென்று விட்டனர்.

மேலும் தர்மலிங்கம் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் அவமானம் என கருதி கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது விழுந்து விட்டதாக கூறி சிகிச்சைக்கு சேர்ந்தார். தர்மலிங்கம் சேர்ந்தவுடன் மருத்துவமனை தரப்பில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் தர்மலிங்கத்திடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் தீர விசாரித்துள்ளனர்.

அந்நிலையில் தர்மலிங்கம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் போலீசாரிடம் கூறினார். இதை அடுத்து துடியலூர் போலீசார் அடிதடி வழக்கு பதிவு செய்து சாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் உயிரிழந்தார். அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அடித்தவர்களை போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து அந்த  சம்பவத்தில் தொடர்புடைய கவுண்டம்பாளையம் பகுதியில் குடி இருக்கும் திருநங்கைகள் ரேஷ்மிகா, மம்தா, கௌதமி, ரூபி உள்ளிட்டோரை நேற்று  கைது செய்து காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கீர்த்தி என்ற திருநங்கையை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி?
Next articleவிவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை!