17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்!

0
132
do-17-year-olds-need-it-cops-caught-hand-and-foot
do-17-year-olds-need-it-cops-caught-hand-and-foot

17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்!

கோவை மாவட்ட அடுத்த பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில்  துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம்  மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள் இதனால் போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தார்கள். அப்போது போதைக்காக பயன்படுத்தும் வலி  நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள் அப்போது ஈரோட்டில் இருந்து கோவைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும்  இரண்டு சிறுவர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 620 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவர்கள் இருவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Previous articleவழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் கோமா நிலையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு 
Next article1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் 8 ஆயிரம் வட்டி! ஐ எஃப் எஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்