தொடர்ந்து நீடிக்கும் ரேசன் அரிசி கடத்தல்!..களமிறங்கிய காவல்துறையினர்..
கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லைகுட்பட்ட ஒரு பகுதியில் களியக்காவிளையில் நேற்று இரவு போலீஸார்கள் அதிரடி கண்காணிப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.காவல் துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்தனர்.
மேலும் கவனத்தோடு அந்த லாரியை சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த அழகிய பாண்டி புரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இவருடைய பெயர் முத்துசிவன் என்பதும் இவருடைய வயது 46 என்பதும் மற்றும் இவரிடம் தொடர்ந்து பல விசாரணைகளை நடத்தினார்கள். அப்போது அந்த லாரி ஓட்டுநர் கூறியது என்னவென்றால் ரேஷன் அரிசி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல கொண்டு வந்ததாக கூறினார்.
பின்னர் அரிசி மற்றும் லாரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.