நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Rupa

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

சமீப காலமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த கனமழையால்  ஏரி, குளம் குட்டை போன்றவை நிரம்பி வழிகின்றன. அவ்வாறு நிரம்பி வழிந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள கோரப்பாளையம் ஏரி நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.

இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அங்கு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ளை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தையும் அந்த வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பள்ளிக்கு அருகில் உள்ள ஓடையில் இருந்து வெளியேறிய நீரினால் பள்ளி வெள்ள நீரில் மிதக்கிறது. இதனை அப்புறப்படுத்தும் வரை அப்பள்ளிக்கு விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.