மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வந்த நிலையில் பிரதமர் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு மாதந்தோறும் தலா ஐந்து கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகின்றது.மேலும் மத்திய அரசு ரேஷன் பொருள் திட்டம் தொடங்கத்தில் இருந்து தற்போது வரை ரூ மூன்று லட்சம் செலவிட்டுள்ளது.
இந்நிலையில் அரிசி உணவு, தானியங்கள் கையிருப்பு குறித்து கவலைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. நடப்பாண்டின் இறுதியில் குஜராத் ,ஹிமாசல பிரேதசம் பேரவை தேர்தல் நடப்பெறவுள்ளது.
அதனால் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சுமார் 80 கோடி மக்களுக்கு ரேஷனில் மாதந்தோறும் தலா ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை வழங்கும் திட்டம் இம்மாதம் இறுதியில் முடியும் நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொடரப்படும் என்ற முடிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.மேலும் ரூ10,000 கோடி செலவில் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணியும் நடைபெறவுள்ளது.