மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு!

0
167
The announcement made by the central government! Increase in basic salary for them!
The announcement made by the central government! Increase in basic salary for them!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு!

டெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் மூலம் முந்ததாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 50 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம்  ஓய்வூதியம் பெறுபவர்களும் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அந்த அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 31 சதவீதம் இருந்த அகவிலைப்படி 34சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்ந்துள்ளதால் 25 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கும் ஊழியரின் ஊதியம் ரூ 1,000 அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.