ஒரே வாரத்தில் பாத வெடிப்பு நீங்க வீட்டு வைத்தியம்!

0
167

ஒரே வாரத்தில் பாத வெடிப்பு நீங்க வீட்டு வைத்தியம்!

பல பெண்களுக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் பாத வெடிப்பு. இந்த பாதபடிப்பானது பல காரணங்களால் உண்டாகிறது. குறிப்பாக ஈரப்பதம் குறைவு விட்டமின் குறைபாடு நீண்ட நேரமாக நின்ற வேலை செய்வது வயது முதிர்வு தைராய்டு பிரச்சனை போன்ற காரணங்களால் பலருக்கும் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இந்த பாத வெடிப்பால் அவர்கள் விரும்பும் காலணிகளை கூட அணிய முடியாது. இதற்கு பாதங்கள் எப்பொழுதும் சற்று ஈரப்பதமாக இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான பொருட்களை உபயோகப்படுத்தி வரும் பொழுது பாதவெடுப்பை தடுக்கலாம்.

முதலாவதாக அனைவரும் உபயோகம் செய்யும் மவுத்வாஸ்:

இந்த மௌத் வாஷில் ஆல்கஹால் உள்ளது. அதனால் வறண்ட சருமத்தை மிருதுவாக்குவதுடன் கால்களையும் ஈரப்பதனுடன் வைத்துக் கொள்ளும்.

வாழைப்பழம்:

வாழைப்பழமும் ஈரத்தன்மை காக்கும் தன்மை உடையவை. வாழைப்பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வரலாம்.

தேன்:

நமது இயற்கை தரும் கிருமி நாசினி தான் இந்த தேன். இது சருமத்தை புத்துணர்ச்சி அளிக்க உதவும். வெந்நீரில் சிறிதளவு தேன் சேர்த்து அதில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு கழுவி விடலாம். இவ்வாறு செய்து வர பாத வெடிப்பு குணமாகும்.

எலுமிச்சை மற்றும் வாஸ்லின்:

பொதுவாகவே வாசலினை வறண்ட சருமத்திற்கு உபயோகம் செய்வார். அந்த வகையில் பாதவெடிப்பை சரி செய்யவும் இது பயன்படும். இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் வாசலினை தடவி கொள்ளலாம். இவ்வாறு தடவிய பிறகு உடல் சூடு வெளியேறும் அதனை தடுக்க சாக்ஸ் போன்றவை அணிந்து உறங்கலாம். காலையில் எழுந்தவுடன் பாதங்களை கழுவி கொள்ளலாம்.

கற்றாழை:

கற்றாழையையும் வெடிப்புள்ள இடத்தில் தடவி பின் தூங்கலாம். கற்றாழை தடவுவதாலும் உடல் சூடு வெளியேறும். அதனை தடுக்க கம்பளியால் ஆன கால் உறைகளை அணியலாம். பின்பு காலையில் எழுந்தவுடன் கால்களை கழுவிக் கொள்ளலாம். இவ்வாறு செய்து வர வறண்ட சருமம் மிருதுவாக மாறும்.

Previous articleஇந்த நான்கு உணவுகளால் உங்கள் ஆண்மை இழக்க நேரிடும்! ஆண்களே ஜாக்கிரதை!
Next articleஐப்ரோ த்ரெட்டிங் செய்தால் ஆயுள் குறையும்! பெண்களே அலார்ட்!