பரவி வரும் பறவை காய்ச்சல்! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

0
341
Spreading bird flu! Disinfectant spraying work intensity!
Spreading bird flu! Disinfectant spraying work intensity!

பரவி வரும் பறவை காய்ச்சல்! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி ,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.மேலும் அந்த இரண்டு ஆண்டுகளும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டுள்ளனர்.

நடப்பாண்டில் தான் மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு சென்று பொது தேர்வுகளை நேராடியாக சென்று எழுதியுள்ளனர்.சமூக இடைவெளி ,பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் ,கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது.அதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரங்காம்மை நோய் தோற்று பரவலும் மக்களை அச்சுறுத்தி வந்தது.

அதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகின்றது.அதனால் கேரளா அருகே உள்ள கோவை மாவட்ட எல்லைகளான வாளையாறு , வேலந்தாளம் ,முள்ளி ,ஆனைக்கட்டி ,பட்டிசாலை ,தோலம்பாளையம் ,சோதனைச் சாவடிகளில் கால்நடை மருத்துவர்களின் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றது.

மேலும் கேரளாவிற்கு கோழி ,முட்டை ,தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்பி வரும் வாகனங்களின் வாகன எண்கள் மற்றும் முகவரி போன்றவைகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.மேலும் கோவையில் உள்ள கோழி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணியானது மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!
Next articleதங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here