Breaking News, World

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

Photo of author

By Parthipan K

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வந்தது அதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதித்தனர். அதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அந்த வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகாளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது.தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன.

கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் சற்று குறைந்தது.அதனால் உலக நாடுகள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. சர்வதேச பயணிகளை அனுமதிக்க தொடங்கினார்கள்.இந்நிலையில் கடந்த வாரங்களாக சீனா ,ஜப்பான் ,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.

அதனால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளதுஅந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக தற்போது சீனாவில் கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது.மொரோக்கோவில் ஒரு புதிய கொரோனா அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளை குறைப்பதற்கு சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் மொரோக்கோ எல்லைக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த முடிவு இரு நாட்டு மக்களிடையே எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.வரும் ஐந்தாம் தேதி முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் என ஆஸ்திரேலியா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த வகுப்புகளுக்கு மட்டும்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்! 

நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

Leave a Comment