தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களில் ரயில் பாதை மாற்றம்!
கடந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் போக்குவரத்து சேவைகளும் படிப்படியாக தொடங்கி உள்ளது.
இந்நிலையில் கடந்த பண்டிகை நாட்களில் அனைத்து ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னையில் இருந்து கேரளம் செல்லும் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.அதனால் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து நாள்தோறும் கேரள மாநிலம் ஆலப்புழைக்கு செல்லும் விரைவு ரயில் வண்டி எண் 13351, மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து கொச்சுவேலிக்கு இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மேலும் மறுமார்க்கமாக ஆலப்புழையில் இருந்து நாள்தோறும் தன்பாத் செல்லும் விரைவு ரயில் வண்டி எண் 13352 ,கொச்சு வேலியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவுக்கு வாரம் இரண்டு முறை செல்லும் விரைவு ரயிலும் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கும்.
இந்த ரயில்கள் சென்னை சென்டரல் வழியாக செல்வதற்கு பதிலாக பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.அதனையடுத்து பாலக்காடு, சென்னை, கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் இருந்து தினமும் மாலை 4 .10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 4.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மேலும் இந்த ரயில் பிப்ரவரி 21 ஆம் தேதி கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், மல்லூர்,சேலம்,மோரப்பூர்,ஜோலார்பேட்டை,காட்பாடி,அரக்கோணம்,திருவள்ளூர்,பெரம்பூர் வழியாக இயக்கபடாது.அதற்கு பதிலாக திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மற்றும் எழும்பூர் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.