தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

0
188
Preventive action in the border areas of Tamil Nadu!! Public Health Department Order!!
Preventive action in the border areas of Tamil Nadu!! Public Health Department Order!!

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது.

மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின்  வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு  ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது.

இவற்றின் மூலம் அதனை ஒழிப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி வளாகம் முழுவதும் கொசு உற்பத்தி செய்யாமல் தடுக்க புகை மருந்து அடித்தல் வேண்டும்.மேலும் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள அனைத்து தண்ணீர் தொட்டிகளும் சுத்தம் செய்து குளோரின் கலந்து பராமரிக்க வேண்டும்.

தமிழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு ஏதேனும் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் காய்ச்சல்  பரவும் ஆபாயம் இருப்பதால் அதனை  தடுக்கும் விதமாக சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட கடும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமஞ்சள் காமலை வந்தவன் மாதிரி இருக்கான்!! மஞ்சள் வீரன் பற்றி பதிவிட்ட புளூ சட்டை!!
Next articleஜூலை 1 ஆம் தேதி புனித யாத்திரை தொடக்கம்!! ஸ்பாட் பதிவு ஆரம்பம்!!