சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நடந்த குற்ற செயல்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை என அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறைவதாக தெரியவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் தமிழகத்தில் பல பகுதிகளில் கொலையும் ,குண்டு வீச்சும் தொடர் கதையாக உள்ளது என்றும் இதனால் மக்கள் அச்சமடைந்து தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியில் வருவதற்கே பயப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்காததனால் தான் சட்டப்படி அவர்களால் பணியாற்ற முடியவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.
எனவே காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனவும் அதன் மூலமே அவர்களால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க முடியும் என முதலமைச்சரை EPS வலியுறுத்தி உள்ளார். போலீசாரின் திடீர் தற்கொலைகள்,
கடலூர் மாவட்டத்தின் திமுக எம்எல்ஏ வை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவமும், பாமக நகர செயலாளர் நாகராஜன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பு ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டி முதலமைச்சரை சாடியுள்ளார். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்பட்டு வருவதாகவும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.