கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!!

கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!!

கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு குறித்த விசாரணை தற்போது தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் 24 அன்று கொடநாட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்து பரபரப்பை எற்படுத்தியது.

இதில், பல பொருட்களும், கோப்புகளும் திருடுப் போனதாக கூறப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சில பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். எனவே இதுகுறித்து போலீசார் வெளி மாநிலங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறிய சில நாட்களிலேயே இதன் குற்றவாளியான கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் விபத்தில் கொல்லப்பட்டார். இதன் மற்றொரு குற்றவாளி சயான். இவர் நூலிழையில் விபத்தில் இருந்து உயிர் தப்பினார்.

இவரிடம் போலீசார் விசாரித்த பிறகு எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டோம் என்று வழக்கை திசை திருப்பினார்.இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி இடம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை வழக்கு மற்றும் உயிரிழப்பு குறித்து தமிழ்நாடு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது கொடநாட்டில் ஜெயலலிதா அறையின் உடைக்கப்பட்ட பூட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.இந்த பூட்டினால் வழக்கில் திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் இது குறித்து சட்ட சபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த கொடநாடு வழக்கு அவர்கள் ஆட்சியில் தானே நடந்தது பிறகு ஏன் முறையாக விசாரிக்கவில்லை.

இந்த சம்பவம் உங்கள் ஆட்சியில் நடைபெற்ற போதே எந்தவித ஆதாரங்களையும் கண்டறிய முடியவில்லை. இந்த வழக்கினால் எடப்பாடி தடுமாறி வருகிறார்.

இதில் எடப்பாடி மீது குற்றம் சாட்டிய சயனுக்கு திமுக உதவி வருவதாக எடப்பாடி கூறி உள்ளார். எனவே, உண்மையான குற்றவாளிகள் சீக்கிரமாக சிக்குவார்கள். கண்டிப்பாக அதை கண்டுப்பிடிப்போம், சிபிஐ இதை கண்டிபிடித்தே தீரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்.