இனி  பெண்கள் தைரியமாக வெளியே செல்லலாம்!! முதல்வர் அதிரடி உத்திரவு!!

0
33
Now women can go out boldly!! Chief Minister warrants action!!
Now women can go out boldly!! Chief Minister warrants action!!

இனி  பெண்கள் தைரியமாக வெளியே செல்லலாம்!! முதல்வர் அதிரடி உத்திரவு!!

அனைத்து  மாநில அரசுகளும்  பெண்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதனை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் பெண்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.தமிழகத்தில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அமையார் பெண் கழிவி உதவித் திட்டம், புதுமை பெண் திட்டம், கைப்பெண் மறுமண உதவித் திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்.

அதனை  தொடர்ந்து திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்குக்கான திருமண உதவித் திட்டம், கலப்பு திருமண உதவி திட்டம் இலவச தையல் இயந்திர வழங்கும் திட்டம் , பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள்  இது போன்று பல திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க முதல்வர் காவல்துறை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மாநில பெண்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து போதை பொருள்கள் விற்பனையை தடுக்க வேண்டும். மேலும் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Jeevitha