புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்!! கடும் அவதிக்கு உள்ளாகும் பயணிகள்!!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து தினமும் திருவொற்றியூர், எண்ணூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, நெல்லூர் என மொத்தம் 176 கிலோ மீட்டருக்கு இந்த புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செல்லும் இந்த புறநகர் ரயில்கள் பேசன் பிரிட்ஜ், தண்டையார் பேட்டை, கோருக்கு பேட்டை, வவூசி, திருவொற்றியூர் மற்றும் விம்கோ உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இதில், தினமும் ஏராளமான மக்கள் வேலைக்காகவும், மாணவர்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்கிறார்கள். நகரில் பேருந்து போக்குவரத்துகள் மிகுந்து காணப்பட்டாலும், பொது மக்கள் ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதிகின்றனர்.
இந்த நிலையில், தற்போது எண்ணூரில் உள்ள அறையில் நிலையத்தில் திடீரென உயர்மின் அழுத்த கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல் நோக்கி இயக்கப்படும் புறநகர் ரயில்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையினால் இன்று காலை ஏழு மணி முதல் புறநகர் ரயில் சேவை நிறத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலைக்கு, பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் அனைவரும் பாதிப்படைந்து உள்ளனர்.
இந்த மின் அழுத்த பிரச்சனையை சரி செய்ய அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து எண்ணூர் வருவதற்கு ரயில்களை இயக்க மொத்தம் மூன்று பாதைகள் மட்டுமே உள்ளது. இந்த பாதைகளில் ரயில்கள் முப்பது நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதனால் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு இந்த புறநகர் ரயில் தான் ஒரு ஆறுதலாக இருந்தது. ஆனால் இன்று அதிலும் மின் அழுத்த கோளாறு ஏற்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
எனவே, உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்து மீண்டும் ரயில் சேவையை துவங்க தொழில்நுட்ப வல்லுனர்கள் மிகவும் முயற்சி செய்து வருகின்றனர். பணிகள் நிறைவடைந்த பிறகு ரயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.