பயங்கரமான உடல் சூடு மலச்சிக்கல் மாயமாக வேண்டுமா?? இதனை குடித்தால் போதும்!!

Photo of author

By Parthipan K

பயங்கரமான உடல் சூடு மலச்சிக்கல் மாயமாக வேண்டுமா?? இதனை குடித்தால் போதும்!!

பயங்கரமான உடல் சூடு கேஸ் அசிடிட்டி கைகால் எரிச்சல் மலச்சிக்கல் மாயமாக போக இதனை குடித்தால் போதும்.அடிக்கடி வியர்வை வருவதும், உடல் சூட்டினால் வயிறு வலிப்பதும் உடல் உஷ்ணத்தை குறிக்கின்றன.

கோடை பருவ காலத்தில் உடலின் உஷ்ணம் அதிகரிப்பதை தவிரக்க முடியாதது. உடல் சூடு அதிகரிக்கும் பொழுது தூக்கமின்மை, கண் எரிச்சல், வயிற்று வலி, அல்சர் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக வெப்பம் மற்றும் ஒரு சில உணவுகளால் உடல் சூடு அதிகரிக்கும்.

மேலும் வெயிலில் அதிக நேரம் செலவிடுவது, காரமான உணவுகள், ஒரு சில பருப்புகள், இறைச்சி மற்றும் அதிக புரதம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் உடல் சூடு அதிகரிக்கும். இந்த காரணங்களை தவிர்த்து மருத்துவ பிரச்சனைகளாலும் உடல் சூடு அதிகரிக்கலாம்.

எனவே உடல் சூடு கேஸ் ஆசிடிட்டி எரிச்சல் மலச்சிக்கல் இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

சீரகம்

பெருஞ்சீரகம்

கொத்தமல்லி விதை

செய்முறை:

முதலில் ஒரு கிளாஸில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அதனை இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

பிறகு காலையில் எழுந்து அந்த தண்ணீரை வடிகட்டி அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களும் தீர்ந்து விடும். இதனை நாம் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

இதனை நாம் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் அசிடிட்டி பிரச்சனை கேஸ் கோளாறு மலச்சிக்கல் பிரச்சனை இது போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பு தானாக வெளியேறும். உடல் பருமன் படிப்படியாக குறையும்.