தேங்காயுடன் இந்த 2 பொருளை சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

0
127

தேங்காயுடன் இந்த 2 பொருளை சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

ஏராளமானோருக்கு தீராத ஒரு பிரச்சினை தான் ஜாயிண்ட் பெயின்ஸ். அதாவது முழங்கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி முதுகு வலி நடக்கும் போது மூட்டில் சத்தம் வருவது என பல வலிகள் ஏற்படுகிறது. இந்த அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் ரெமிடியை எவ்வாறு தயாரிப்பது அதை எப்போது உபயோகிப்பது என்பது குறித்து விரிவாக கீழே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கசகசா
சோம்பு
கொப்பரை தேங்காய்
கற்கண்டு
நெய்
பால்

பொருட்களின் பயன்கள்:
கசகசா:
கசகசாவை எந்த உணவில் சேர்த்தாலும் சுவை தரும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அதே அளவு இது நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். அதாவது உடம்பில் ஏற்படக்கூடிய ஜவ்வு பிரச்சனையை இது சரி செய்கிறது. மேலும் இதில் கால்சியம் அதிகமாக இருப்பதால் கால்சியம் குறைபாடு இருப்பவர்களுக்கு இது மிகவும் சிறந்த ஒரு மருந்தாகும்.

சோம்பு:
இதில் வைட்டமின் பி வைட்டமின் சி பொட்டாசியம் கால்சியம் ஃபைபர் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. மேலும் இது நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கவும் பயன்படுகிறது. அதோடு அஜீரணம் உப்பசம் கேஸ் அசிடிட்டி வாயு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. அதேபோல கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தலைமுடி பிரச்சினைகளுக்கும் மிகுந்த உதவிகரமான ஒரு பொருளாக அமைகிறது.

கொப்பரை தேங்காய்:
எலும்புகளை பலப்படுத்தவும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யவும் கொப்பரை தேங்காய் மிகவும் பயன்படுகிறது.

கற்கண்டு:
வாதம், பித்தம் கபம் போன்ற ஏராளமான நோய்களை சரி செய்ய கற்கண்டு பயன்படுகிறது. இது நம் உடம்பில் அஜீரணக் கோளாறு ஏற்படாமல் தடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய சூட்டை தணிக்கிறது.

செய்முறை:
1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு நெய்யை விட்டு சிறிதளவு சூடாக விடவும்.

2. நெய் சூடான பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கசகசாவை சேர்த்து நெய்யிலேயே நன்றாக வறுக்க வேண்டும்.

3. பிறகு இதில் ஒரு கிளாஸ் அளவு பாலை ஊற்றி பால் சூடாகும் வரை விட வேண்டும்.

4. பால் சூடான பிறகு இதில் ஒரு டீஸ்பூன் அளவு சோம்பை சேர்த்து பாலை கொதிக்க விடவும்.

5. பிறகு இதனுடன் சிறிதளவு கொப்பரை தேங்காய் மற்றும் கற்கண்டை சேர்த்து கலந்து கொள்ளவும். சர்க்கரை நோய் மற்றும் பிபி நோயாளிகள் கற்கண்டை தவிர்க்க வேண்டும்.

பால் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு இதை ஆறவைத்து எடுத்துக் கொள்ளவும். பாலில் நாம் சேர்த்து இருக்கக்கூடிய கொப்பரை தேங்காயை முதலில் சாப்பிட்டு விட்டு பிறகுதான் பாலை குடிக்க வேண்டும்.

இந்தப் பாலை இரவு உணவு சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு தூங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக குடிக்க வேண்டும். இவ்வாறு இந்த பாலை இரவு குடித்துவிட்டு தூங்குவதால் அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ரத்த சோகை உடல் சோர்வு பலவீனம் என அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

கிட்னியில் கல், மலச்சிக்கல், கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும். சளி இருமல் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆஸ்துமா பிரச்சினைகள் சுவாசப்பதில் பிரச்சனைகள் என அனைத்தையும் இந்த பால் சரி செய்து விடும். குறிப்பாக தூக்கமின்மை பிரச்சனையை இது முழுவதுமாக சரி செய்கிறது.

இந்த பாலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு தூங்குவதற்கு முன்பாக எடுத்துக் கொண்டாலே போதும் உடம்பில் ஏற்படக்கூடிய அனைத்து வலி வீக்கங்கள் என அனைத்தும் உடனடியாக சரியாகும்.

குறிப்பு:
இந்த பாலில் கசகசா சேர்த்திருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை குடிக்கக்கூடாது.

 

Previous articleஇதை 7 நாட்களுக்கு குடிங்க!! மனதைக் கவரும் அளவுக்கு உடல் எடை குறையும்!!
Next articleஇந்த ஒரு விதை போதும்!! எந்த நோயும் நம்மை நெருங்காது!!