க்ரன்ச்சி & க்ரிஸ்பியான “உருளைக்கிழங்கு சில்லி”!! இப்படி செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!!

0
57
#image_title

க்ரன்ச்சி & க்ரிஸ்பியான “உருளைக்கிழங்கு சில்லி”!! இப்படி செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!!

உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த உணவு பொருட்களில் ஒன்று.இதில் சிப்ஸ்,சில்லி போன்றவை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கிட்டத்தட்ட சிக்கன் சுவையில் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு சில்லியை ஹோட்டல் ஸ்டைலில் செய்வது எப்படி என்ற தெளிவான செய்முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த முறைப்படி செய்து பாருங்கள் செம்ம ருசியாக இருக்கும்.வீட்டில் இருப்பவர்கள் இன்னும் வேண்டும் என்று கேட்கும் வகையில் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

உருளைக்கிழங்கு – 2 (பெரியது)

*மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

*சோள மாவு – 2 தேக்கரண்டி

*மைதா மாவு – 2 தேக்கரண்டி

*இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி

*தூள் உப்பு – தேவையான அளவு

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*காஸ்மீரி சில்லி – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

1.பெரிய சைஸ் உருளைக்கிழங்கு எடுத்து சுத்தமாக கழுவி தோல் நீக்க வேண்டும்.

2.பின்னர் வெஜிடேபிள் பீலரில் வாழைக்காய்,உருளைக்கிழங்கு சீவும் இடத்தில் வைத்து மெல்லியதாக சீவிக் கொள்ள வேண்டும்.

3.அதனை ஒரு பவுலுக்கு மாற்றி அதில் உப்பு சேர்க்க வேண்டும்.

4.மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும்.

5.இஞ்சி பூண்டு,காஸ்மீரி சில்லி சேர்த்து கலக்க வேண்டும்.

6.பிறகு சோளமாவு மற்றும் மைதா மாவு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி 5 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும்.உருளைக்கிழங்கு தண்ணீர் விடும் என்பதினால் அவற்றில் சிறிதளவு கூட நீர் சேர்க்காமல் அனைத்தையும் மிக்ஸ் செய்ய வேண்டும்.

7.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சில்லி பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு வேகும் வரை விடவும்.பிறகுஅவற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.இதன் டேஸ்ட் கடையில் செய்வது போன்று இருக்கும்.இந்த உருளைக்கிழங்கு சில்லியுடன் பொரித்த கருவேப்பிலை அல்லது நறுக்கிய பெரிய வெங்காயத்தை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.