தித்திக்கும் அரிசி பாயசம்.. அடடா என்ன ஒரு சுவை!! மறக்காம இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!

0
28
#image_title

தித்திக்கும் அரிசி பாயசம்.. அடடா என்ன ஒரு சுவை!! மறக்காம இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!

நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் அரிசி பாயசம்.இந்த வகை பாயசம் மிகவும் தித்திப்பாகவும்,அதிக சுவையுடனும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – 1 டம்ளர்

*சர்க்கரை – 200 கிராம்

*பசும்பால் – 1 லிட்டர்

*ஏலக்காய் – 8

*முந்திரி – 5 (நறுக்கியது)

*தேங்காய் – 1 1/2 தேக்கரண்டி (துருவியது)

*குங்குமப்பூ – சிறிதளவு

*உலர் திராட்சை – 8

*பாதம் – 5 (நறுக்கியது)

*நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.பச்சரிசி 1 டம்ளர் அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஊறவைக்கவும்.

2.அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் 1 லிட்டர் பசும்பால் சேர்க்கவும்.

3.பின்னர் அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும்

4.அதன் பிறகு ஏலக்காய் 8 எடுத்து அதில் உள்ள விதைகளை மட்டும் பாலில் சேர்க்கவும்.

5.பின்னர் ஊறவைத்துள்ள பச்சரிசி சேர்த்து கைவிடாமல் கிளறவும்.ஏனென்றால் அரிசி சேர்த்துள்ளதால் அவை அடிபிடிக்க வாய்ப்பு இருக்கிறது.மிதமான தீயில் தொடர்ந்து கிண்டுதல் அவசியம்.

6.அரிசி வெந்து வரும் தருணத்தில் சர்க்கரை 200 கிராம் சேர்த்து கிளறவும்.பின்னர் நன்கு வெந்து வந்த பின் இறக்கி விடவும்.

7.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி அவை சூடேறியதும் எடுத்து வைத்துள்ள உலர் திராட்சை,நறுக்கி வைத்துள்ள பாதம்,முந்திரி மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கி அவற்றை எடுத்து செய்து வைத்துள்ள அரசி பாயசத்தில் சேர்த்து கிளறவும்.இந்த முறையில் செய்தால் நாக்கில் வைத்திடவுடன் கரைந்து செல்லும் அளவில் அரிசி பாயசம் மிகவும் ருசியாக இருக்கும்.