கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் “ஆனியன் டீ” – செய்வது எப்படி?

0
45
#image_title

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் “ஆனியன் டீ” – செய்வது எப்படி? ஹு

இன்றைய வாழ்க்கை முறை கடந்த காலங்களை விட முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.உணவு முறையில் பெரும் மாற்றத்தை இன்றைய தலைமுறை சந்தித்து வருகிறது.பாஸ்ட் புட்,வறுத்த உணவு என்று புது புது உணவுகளை கண்டு பிடித்து நாக்கிற்கு ருசியாக உண்டு வரும் நமக்கு உடல் ஆரோக்கியத்தை பற்றி துளியும் கவலை இல்லை என்பது தான் நிதர்சனம்.கொழுப்பு நிறைந்த உணவு,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,முறையற்ற தூக்கம் ஆகியவை நம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

நாம் ருசித்து சாப்பிடும் ஹோட்டல் புட் அணைத்தும் ஆரோக்கியமானதா? என்றால் அதற்கு பதில் கேள்வி குறியாகத்தான் இருக்கும்.இப்படி முறையற்ற உணவுகளை அதிகளவு எடுத்து வந்தோம் என்றால் கூடிய விரைவில் உடலில் அதிகளவு கொழுப்பு உருவாகி எடை அதிகரித்து விடும்.இதனால் இதய பாதிப்பு,இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்பு ஆகியவற்றை நாம் சந்திக்க நேரிடும்.

இதற்கு பல இயற்கை வழிகள் இருக்கிறது.முக்கியமாக மூலிகை தேநீர் முறை.இந்த மூலிகை தேநீர் இஞ்சி தேநீர்,துளசி தேநீர்,லெமென் தேநீர் என்று பல வகைகள் இருக்கிறது.ஆனால் கொழுப்பை கட்டுப்படுத்த வெங்காயத் தேநீர் என்ற ஒன்று இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

வெங்காயத்தில் இயற்கையாவாகவே ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்து காணப்படுகிறது.இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.இதில் தேநீர் செய்து பருகினால் உடலில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் மோசமான இரத்த ஓட்டம் பிரச்சனை விரைவில் சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)

*தேன் – 1 1/2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*தூள் உப்பு – 1 சிட்டிகை அளவு

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

2.அதில் 1/4 கப் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

3.பிறகு 2 கப் தண்ணீர் 1 கப் அளவிற்கு வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

4.அதனை டம்ளருக்கு வடிகட்டி அதில் தேன் 1 1/2 தேக்கரண்டி,எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி மற்றும் தூள் உப்பு 1சிட்டிகை அளவு சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.