வியர்வை மூலமாக நாற்றம் ஏற்படுகின்றதா!!! இதோ அதை போக்க எளிமையான வீட்டு வைத்தியம்!!!

0
87
#image_title

வியர்வை மூலமாக நாற்றம் ஏற்படுகின்றதா!!! இதோ அதை போக்க எளிமையான வீட்டு வைத்தியம்!!!

நம் உடலில் சுரக்கும் வியர்வை மூலமாக நமது உடலில் ஏற்படும் நாற்றத்தை போக்குவது குறித்த சில எளிமையான டிப்ஸ் குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நம் உடலில் சுரக்கும் வியர்வை மூலமாக உடலில் அதிகமாக தேங்கி இருக்கும் உப்பு வெளியேறுகின்றது. இதனால் உடலுக்கு நல்லது தான். இருந்தாலும் இதன் மூலம் நாற்றம் ஏற்படுகின்றது. இந்த நாற்றத்தை எவ்வாறு போக்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

வியர்வை நாற்றத்தை போக்க உதவும் டிப்ஸ்…

* நம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை போக்குவதற்கு நாம் முதலில் ஒரு நாளுக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும்.

* மருத்துவர்களின் ஆலோசனைப்படி கிருமி நாசினி சோப்புகளை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.

* நாம் குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து குளிக்க வேண்டும். இதனால் வியர்வை மூலம் ஏற்படும் நாற்றம் போகும்.

* மாதத்திற்கு இரண்டு முறை அக்குள்களில் இருக்கும் முடியை எடுக்க வேண்டும். குறைந்தது ஒரு முறையாவது அக்குள்களில் இருக்கும் முடியை எடுக்க வேண்டும்.

* சந்தனப் பொடி வாங்கி அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து குறைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அக்குள்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

* குளித்து முடித்த பிறகு கிழங்கு மஞ்சளை குலைத்து பூசி வரலாம்.

* குளிக்கச் செல்லும் முன்பு கெட்டியான தயிருடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து கொண்டு அக்குள்களில் தேய்த்து சிறிது நேரம் கழிந்து குளிக்கச் செல்லலாம்.

* கற்றாழையை எடுத்து அக்குளில் தேய்த்து குளித்து வர வேண்டும். இவ்வாறு செய்வதால் வியர்வை நாற்றம் தீரும்.

* சந்தனப் பொடி, வெட்டி வேர் பொடி, பாசிப்பருப்பு மாவு, ரோஸ் வாட்டர் அனைத்தையும் சேர்த்து நன்கு குலைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை அக்குள்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழிந்து கழுவி விடலாம்.

* புதினா இலைகளை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்கு அரைத்து அக்குளில் பூச வேண்டும். சிறிது நேரம் கழிந்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடலாம்.

Previous articleவிந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சாமை!!! இதில் ஊத்தப்பம் செய்வது எப்படி!!!
Next articleகுருவை விட்டு விலகும் ராகு பகவான் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?