உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் முருங்கை கீரை சூப்!! சுவையாக செய்ய இந்த முறையை பாலோ பண்ணுங்க!!
நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து,உடல் பருமனை குறைக்கின்றது.
முருங்கை கீரையில் உள்ள அதிகளவு இரும்பு சத்துக்கள் ரத்தசோகை பாதிப்பை குணமாக்குகிறது.அதேபோல் மலச்சிக்கல்,மலட்டுத்தன்மை,தலை முடி உதிர்வு பிரச்சனை,தோல் வியாதிகள்,சுவாசக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.
முருங்கை கீரையில் சூப் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:-
முருங்கை கீரை – 2 கைப்பிடி அளவு
பூண்டு – 6 பற்கள்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*மிளகு – 1/4 தேக்கரண்டி
*உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:-
1.முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் 1/2 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
2.பிறகு உப்பை தவிர்த்து மற்ற அனைத்தையும் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அனைத்து விட்டு அவற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும்.
3.பின்னர் வடி கட்டியில் படிந்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் அடித்து கொள்ள வேண்டும்.
4.பிறகு மீண்டும் அந்த பானத்தில் கலக்கி தேவைக்கேற்ப உப்பு சேர்த்தால் சுவையான முருங்கை கீரை சூப் தயார்.இவற்றை தினமும் பருகி வந்தோம் என்றால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் கட்டுக்கோப்பாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும்.