அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

0
34
#image_title

அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

நம் முன்னோர்கள் தலை வலி, சளி எதாவது இருந்தால் முதலில் ஆவி பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதன் பிறகுதான் மருத்துவமே பார்த்தனர். முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் மிக எளிதாக வெளியேறிவிடும்.

ஆனால், இன்றைய காலத்தில் பலர் கடைகளில் விற்கும், கண்ட கிரீம்களை பயன்படுத்தி சரும அழகை பாழாக்கிக்கொள்கின்றனர். வெளியில் இருக்கும் தூசுக்களால் நம்முடைய முகத் துவாரங்களுக்குள் படிந்து, அழுக்குகளுடன் இந்த கிரீம்களில் உள்ள கெமிக்கல்களும் சருமத்துக்குள் சென்று அழகை கெடுத்துவிடும்.

அதனால்தான், இயற்கையான முறையில், சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற நம் முன்னோர்கள் இந்த வழிகளை கையாண்டார்கள்.

சரி ஆவி பிடித்தால் நமக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றி விரிவாக பார்ப்போம் –

வாரத்திற்கு 3 முறை நாம் ஆவிபிடித்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி முகம் பளிச்சிடும்.

ஆவி பிடித்துவிட்டு, முகத்தை சுத்தமான துணியால் துடைத்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வெளியேறிவிடும்.

ஆவிபிடித்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் மறைந்துவிடும்.

ஆவி பிடித்துவிட்டு மூக்கில் காணப்படும் வெள்ளை அழுக்கு எளிதாக வெளியேறிவிடும்.

ஆவி பிடித்தால் முகப்பருக்கள் குறைந்துவிடும்.

விவேஷமான விஷயம் என்னவென்றால் ஆவி பிடித்தால் எப்போதுமே நாம் இளமையாக இருக்கலாம்.

சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான் முகம் சோர்வாகவும், முதுமையாக காணப்படும்.

பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

ஆவி பிடித்தல் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.

ஆவி பிடித்தலால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். முகமும், மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

author avatar
Gayathri