உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

0
53
#image_title

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

நமது உடலில் குறைவாக இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த முறையை பயன்படுத்தி பாருங்க.

ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகையான புரதம் ஆகும். இதன் வேலை நம் உடலில் பாயும் இரத்தத்தை சிவப்பாக மாற்றுவது மற்றும் நுரையீரலில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது ஆகும்.

நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் பொழுதும், இரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இல்லாத பொழுதும், இரத்த சிவப்பணுக்கள் ஆக்சிஜனை போதுமான அளவு எடுத்துச் செல்லாதபொழுதும் இரத்த சோகை நோய் ஏற்படுகின்றது. எனவே இரத்த சோகை நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்…

* நெல்லிக்காய் – 3
* பேரிச்சை – 50 கிராம்
* கருப்பு காய்ந்த திராட்சை – 50 கிராம்
* அத்திப்பழம் – 50 கிராம்
* பாதாம் – 50 கிராம்
* ஆப்ரிகாட் – 50 கிராம்
* பட்டை ஒரு துண்டு
* இஞ்சி – 2 துண்டு(துருவியது)

செய்முறை…

முதலில் காற்று புகாத கண்ணாடி ஜார் அல்லது பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மேலே உள்ள பொருட்களில் தேனை தவிற மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இதில் சேர்த்துள்ள அனைத்து பொருள்களும் மூழ்கும் அளவிற்கு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மூடி வைத்து 1 நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். இது நன்கு ஊறிய பின்னர் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இதை பயன்படுத்தலாம்.

அதாவது இதை தினமும் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தவிர்த்து செய்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். தொடர்ந்து இதை பயன்படுத்திக் கொண்டு வந்தால் 3 மாதத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.