கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் ‘அத்தி’!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா?

0
173
#image_title

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் ‘அத்தி’!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா?

நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்களில் ஒன்று அத்தி.இவை களிமண் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டவை.அத்தி பழத்தில் நாட்டு அத்தி,சீமை அத்தி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த பழத்தில் அதிகப்டியான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் பொட்டாசியம்,ஜிங்க்,மாங்கனீஸ், புரோட்டீன்,கால்சியம்,சர்க்கரை சத்து,பாஸ்பரஸ் வைட்டமின் சி,ஏ,கே,ஈ,கே மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-

*தினமும் 2 அத்திப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு விரைவில் சரியாகும்.அதேபோல் நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்கள் இரவில் 5 அத்திப்பழங்களை உண்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

*மது,புகைபிடித்தல் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற செயல்களால் கல்லீரலில் வீக்கம்,நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.அதனை சரி செய்வதற்கு முதலில் போதை பழக்கத்தை விடுதல் அவசியம்.பின்னர் தினமும் 2 முதல் 3 அத்திப்பழங்களை எடுத்துக் கொள்வதால் கல்லீரல் வீக்கம் குறையும்.

*அதேபோல் தினமும் உலர் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தோம் என்றால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் சரியாகி விடும்.அதுமட்டும் இன்றி ஆஸ்துமா,வலிப்பு நோய்,உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் அத்திப் பழம் உரிய தீர்வாக இருக்கிறது.

*உலர் அத்தியை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தோம் என்றால் மூல நோய் பாதிப்பு ககுணமாகும்.

*பித்தம்,வாதம் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

*உடலுக்கு தேவையான ஆக்சிஜன் சுழற்சியை தருவதில் அத்திக்கு முக்கிய பங்கு இருக்கிறது.காரணம் இதில் நார்சத்து,வைட்டமின்,இரும்புசத்து,கால்சியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் என்று அதிகப்படியான சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

*இரவில் 2 அல்லது 3 உலர் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீருடன் அத்திப்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.

*அத்திப்பழத்தில் உள்ள கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் கே மற்றும் மெக்னீசியம் உள்ளிட்டவை எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.இவை மூட்டு வலி,முதுகு வலி உள்ளிட்டவற்றிற்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது.

Previous articleநாள்பட்ட தேமல் மறைய சில எளிய வழிகள் இதோ!! உடனடி தீர்வு தரும் பாட்டி வைத்தியம் இது தான்!!
Next articleஇதை செய்தால் ஒரு கடி எறும்பு கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!