ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி?

0
74
#image_title

ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி?

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆப்பிள்.இந்த ஆப்பிளில் அதிகளவு வைட்டமின் சி,நார்ச்சத்து இருக்கிறது.தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.ஆப்பிளில் ஜூஸ்,கேக் மாட்டும் இல்லை சட்னியும் செய்து உண்ண முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆப்பிள் சட்னி சுவையாகவும்,உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையிலும் செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

.தேவையான பொருள்கள் :-

*ஆப்பிள் – 2

*சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*வர மிளகாய் – 3

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

*இலவங்கம் – 2

*பெரிய வெங்காயம் – 1

*சர்க்கரை-  சிறிதளவு

செய்முறை:-

ஒரு பாத்திரம் எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.அதில் 2 ஆப்பிள் பழத்தை போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.அடுத்து ஆப்பிள் பழத்தின் தோலை சீவி கொள்ளவும்.பின்னர் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் மூன்று வர மிளகாய்,1/4 தேக்கரண்டி வெந்தயம்,இரண்டு இலவங்கம் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து அதன் தோலை நீக்கி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதனை பொடிபொடியாக நறுக்கி வதங்கி கொண்டிருக்கும் கலவையில் சேர்த்து நன்கு கிளறவும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.பின்னர் சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.இந்த ஆப்பிள் சட்னியை நமக்கு பிடித்த உணவுகளான இட்லி,தோசை,சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Previous articleமுகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க பச்சை பயறு பயன்படுத்துங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!
Next articleவந்தாச்சு மத்திய அரசு வேலை! Reserve Bank of India… மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!