கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!!
மிளகு ஒரு மசாலா வகையைச் சார்ந்தது.இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகில் வைட்டமின் ஏ,சி,கே,கரோடின்கள்,இரும்புச்சத்து,மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகு காரத் தன்மை கொண்ட பொருளாகும்.இவை கொடி வகை பயிராகும்.
கருப்பு மிளகின் பயன்கள்:-
*உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் மிளகிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.வாயுத் தொல்லை இருபவர்கள் தினமும் 2 அல்லது 3 கருப்பு மிளகை மென்று சாப்பிடுவதால் அந்த பாதிப்பு விரைவில் சரியாகும்.
*அதேபோல் வயிற்றுப்போக்கு,மலச்சிக்கல் பாதிப்பு,அமிலச்சுரப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் மிளகு சிறந்த தீர்வாக இருக்கிறது.
*தினசரி உணவில் மிளகை சேர்த்து வந்தோம் என்றால் மனச்சோர்வு,உடல் சோர்வு பாதிப்பு நீங்கும்.
*குடல் புற்றுநோய்,வயிற்றில் ஏற்படும் செல்களை அளிப்பதில் மிளகு சிறந்த தீர்வாக இருக்கிறது.
*இருமல்,சளி தொல்லை இருப்பவர்கள் மிளகில் கஷாயம் செய்து பருகலாம்.இல்லையென்றால் 3 முதல் 4 மிளகை மென்று சாப்பிடலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் இருமல்,சளியால் ஏற்பட்டு இருக்கும் தொண்டைப்புண் பாதிப்பு சரியாகும்.
*பொடுகு தொல்லையால் அவதிப்படும் நபர்கள் 1 கப் தயிருடன் கருப்பு மிளகு சிறிதளவு இடித்து சேர்த்து கொள்ளவும்.பின்னர் இதை நன்கு கலக்கி முடிகளின் வேர் பகுதியில் போட்டு மஜாஜ் செய்யவும்.பின்னர் 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும்.
*1 கிளாஸ் நீரில் அருகம்புல் சாறு சிறிதளவு + இடித்த மிளகு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பருவகுவதன் மூலம் அரிப்பு,தோல் சம்மந்தப்பட்ட பாதிப்பு நீங்கும்.
*மூல நோயால் அவதிப்படும் நபர்கள் மிளகு + பெருஞ்சீரகத்தை பொடி செய்து தேனில் கலந்து சாபிட்டால் விரைவில் அந்த பாதிப்பு சரியாகும்.
*விஷம் கலந்த உணவை உட்கொண்டவர்கள் மிளகு 10 எடுத்து மென்று சாப்பிட்டால் உடலில் கலந்த விஷம் முறிந்து விடும்.இதற்கு தான் கையில் 5 மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் தைரியமாக கையை நினைக்கலாம் என்று பழமொழி இருக்கிறது.