ஆரோக்கியம் நிறைந்த “மா லட்டு”.. இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
88
#image_title

ஆரோக்கியம் நிறைந்த “மா லட்டு”.. இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

நம் அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டங்களில் ஒன்று லட்டு.இதில் பூந்தி லட்டு,ரவா லட்டு,ராகி லட்டு,வேர்க்கடலை லட்டு என்று பல வகைகள் இருக்கிறது.எந்த லட்டாக இருந்தாலும் மணமும்,சுவையும் நம்மை சுண்டி இழுக்கும்.அந்த வகையில் மா லட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள்.

இந்த மா லட்டு செய்ய பயன்படுத்தப்படும் பொட்டுக்கடலையில் அதிகளவு மாங்கனீஸ், போலேட்,பாஸ்பரஸ் மற்றும் காப்பர் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.எனவே தினமும் ஒரு லட்டு செய்து குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.அதேவேளையில் ஒரே நாளில் அதிகளவு மா லட்டு உண்டால் வயிற்றுப்போக்கு,வாந்தி போன்ற பிரச்னைகளை ஏற்படும்

தேவையான பொருட்கள்:-

*பொட்டுக்கடலை – 1 கப்

*சர்க்கரை – 3/4 கப்

*நெய் – 5 தேக்கரண்டி

*முந்திரி பருப்பு – 10

*ஏலக்காய் – 1

செய்முறை:-

.முதலில் 1 கப் பொட்டுக்கடலை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு ஜல்லடை கொண்டு சலித்து ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே மிக்ஸி ஜாரில் 3/4 கப் வெள்ளை சர்க்கரை மற்றும் 1 ஏலக்காய் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 10 முந்திரி பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு மற்றும் சர்க்கரை துளை சேர்த்துக் கொள்ளவும்.பிறகு நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு கையில் நெய் தடவிக் கொண்டு பாத்திரத்தில் உள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.இப்படி மா லட்டு(மா லாடு) செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.அதே சமயம் இந்த மா லட்டு அளவோடு சாப்பிடுவது நல்லது.

ஒருவேளை அதிகளவில் எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு,வாந்தி போன்ற பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Previous article“மைதா பரோட்டோ” பிரியர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! இது உணவு அல்ல ஸ்லோ பாய்சன்!!
Next articleசர்க்கரை நோயை தெறிக்க விடும் “கோவைக்காய் சாதம்” – சுவையாக செய்வது எப்படி?