நம் உடலில் இரத்தத்தை எப்படி சுத்தம் செய்துன்னு தெரியுமா? இதோ பாருங்க..

0
78
#image_title

நம் உடலில் இரத்தத்தை எப்படி சுத்தம் செய்துன்னு தெரியுமா? இதோ பாருங்க…

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உடல் செயல்பாட்டிற்கு அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். நம் உடலில் இயற்கையாகவே இரத்த சுத்திகரிப்பு நடைபெறுகிறது. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாம் உண்ணும் உணவின் மூலமாகவே நம் இரத்தம் அசுத்தமாக மாறிவிடுகிறது.

துரித உணவுகள், குளிர்பானங்கள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவற்றை நாம் சாப்பிட்டாலும் நம் இரத்தம் சுத்தம் இல்லாமல் அசுத்தமாகிவிடுகிறது.

சரி நம் உடலில் ஓடும் ரத்தத்தை எப்படி சுத்தம் செய்யலாம் என்று பார்ப்போம் –

பீட்ரூட்டை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள  ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின்களான ஈ, சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் நம் ரத்தத்தில் உள்ள அழுக்கை நீக்கி புதிய இரத்தத்தை உற்பத்தியாக்கும்.

சூடு தண்ணீரில் பூவை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் நம் ரத்தம் விருத்தியாகும்.

இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

தக்காளியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கி ரத்தம் சுத்தமாகும்.

அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு சரியாகும்.

விளாம்பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் அழகாகுவதுடன் இரத்தம் சுத்தமாகும்.

தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் நம்முடைய ரத்தம் சுத்தமாகும்.

பச்சை காய்கறிகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.