புகை பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்ற அற்புத வாழி இதோ!! இப்படி செய்தால் ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!!
நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று நுரையீரல்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம்.ஒருவேளை இந்த நுரையீல் ஆரோக்கியத்தை இழந்தால் அதற்கு கொழுப்பு நிறைந்த உணவு,அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும்.இந்த நுரையீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
*பூண்டு – 5 பற்கள்
*இஞ்சி – சிறு துண்டு
*மஞ்சள் தூள் – 2 பின்ச்
*நல்லெண்ணெய் -1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் 5 பல் பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின் இதை ஒரு உரலில் போட்டு தட்டிக் கொள்ளவும்.இதை ஒரு கிளாஸுக்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து சிறு துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை உரலில் சேர்த்து தட்டி பூண்டு போட்டு வைத்துள்ள கிளாஸுக்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.
இந்த தண்ணீரை பூண்டு + இஞ்சி இடித்து வைத்துள்ள கிளாஸில் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் 1 எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் பாதி எலுமிச்சம் பழ சாற்றை அதில் பிழிந்து கொள்ளவும்.
பின்னர் சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூளில் 2 பின்ச் எடுத்து அந்த கிளாஸில் சேர்த்து கலக்கவும்.இறுதியாக 1 தேக்கரண்டி சுத்தமான நல்லெணெய் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இவ்வாறு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தயார் செய்து பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள முக்கிய உள் உறுப்பான நுரையீரல் விரைவில் சுத்தமாகிவிடும்.
மற்றொரு எளியத் தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*இஞ்சி – சிறு துண்டு
*சின்ன வெங்காயம் – 4
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*தேன் – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் 1 துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் 4 சின்ன வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.அதனை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சிறு துண்டு இஞ்சி,4 சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பின்னர் சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூளில் 1/4 தேக்கரண்டி அளவு எடுத்து கொதிக்கும் நீரில் சேர்த்து கொள்ளவும்.இதை 2 அல்லது 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இந்த பானத்தை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.இதனை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும்.இவ்வாறு வாரத்தில் 2 அல்லது 3 முறை பருகி வந்தோம் என்றால் கெட்டுப்போன நுரையீரல் விரைவில் சரியாகி விடும்.